''எப்படியும் 1,100 மார்க் வந்துரும்னு உறுதியா நம்பினேன். நான் நினைச்சதைப் படிச்சிடலாம்னு இருந்தேன். ஆனா, 1,000 மார்க்கூட வரலை. எல்லாம் போச்சு சார்!'' என்று ஆற்றாமையோடு கண்கள் பனிக்கப் புலம்பிய ஓர் இளைஞரிடம் ''நீங்கள் நினைத்ததை அடையவும், நீங்கள் குறித்துவைத்த இலக்கை எட்டவும் வேறு பல வகைகளிலும் வாய்ப்புகள் வரும்'' என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவரால் சமாதானம் அடைய முடியவில்லை.
''1,100 மதிப்பெண்கள் பெறுவதற்கான தகுதி என்னிடம் இருக்கிறது. அதற்காக நான் கடுமையாக உழைத்தேன். ஆனால், என் எதிர்காலமே இருண்டுபோச்சு'' என்று தொடர்ந்து அரற்றிக்கொண்டே இருந்தார்.
நினைத்தது நடக்கவில்லை என்பதால், ஆசைப்பட்டதை அடைய முடியாது என்று பல தருணங்களில் முடிவுக்கு வந்துவிடுகிறோம். அந்த முடிவுதான், இலக்கை அடைவதற்கு ஏதுவாகக் கண் முன்னே இருக்கும் இன்ன பிற வாய்ப்புகளையும் கவனிக்க முடியாமல் செய்துவிடுகிறது.
இன்றைக்கு வாழ்க்கையில் ஜெயித்துவிட்டதாக நாம் நினைக்கிற பலரும் அவர்கள் சிறு வயதில் அல்லது இளம் பிராயத்தில் என்னவாக வேண்டும் என்று நினைத்தார்களோ, அதுவாகத்தான் ஆகியிருக்கிறார்களா என்று கேட்டால், நூற்றுக்கு 80 சதவிகிதம் இல்லை என்றுதான் பதில் வரும். இருந்தாலும், அவர்கள் செய்ய நினைத்ததை வேறு ஒரு ரூபத்தில் அல்லது வடிவத்தில் செய்ய முடிந்திருக்கிறது.
இலக்கை அடைவதற்கு மனதுக்குள் தீர்மானித்துக்கொண்ட பாதை மட்டும்தான் ஒரே வழி என்று நினைத்துக்கொள்ள வேண்டியது இல்லை. அந்தப் பாதை அடைக்கப்படுகிறபோது, இலக்கை நோக்கிய பயணம் நின்றுபோகிறது.
நமக்குக் கிடைக்க வேண்டிய விஷயங்கள் நாம் நினைக்கிற வடிவத்திலேயே கிடைக்க வேண்டும் என்று மனதுக்குள் ஒரு குறியீட்டைப் பதிவுசெய்துகொள்கிறோம். அதற்கு குறிக்கோள் என்றும், கொள்கை என்றும், இலக்கு என்றும் ஏதோ ஒரு பெயர்வைக்கிறோம்.
அந்த இலக்கை அடைவதற்குத் தீர்மானிக்கப்பட்ட வழிகள் தவிர, வேறு எந்தப் பாதைகள் உகந்தவை என்று அநேக நேரங்களில் ஆராய்வது இல்லை. ப்ளஸ் டூ வகுப்பில் 1,100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். தமிழகத்தின் தலை சிறந்த கல்லூரியில் சேர வேண்டும். அங்கு 90 சதவிகிதம் எடுக்க வேண்டும். பிறகு, பெயர் சொல்லிக்கொள்ளும்படியான டாப் 10 கம்பெனிகளில் 30,000 ரூபாய் துவக்கச் சம்பளத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும். யோசித்துப் பாருங்கள்... உங்கள் இலக்கை அடைய நீங்களே எத்தனை கண்டிஷன்கள் வைத்திருக்கிறீர்கள்.
இப்படி எல்லாம் திட்டமிட்ட குறிக்கோள் வைத்திருந்தால்தான், இலக்கை அடைய முடியும் என்று சொல்லலாம். இப்படிக் கட்டுப்பாடான திட்டம் வைத்திருப்பவர்கள்தான் ஜெயிக்கலாம் என்றால், வெற்றிபெற்றவர்களில் பெரும்பாலானோர் நினைத்தது ஒன்று... செய்துகொண்டு இருப்பது ஒன்று என்று ஏன் சொல்கிறார்கள்?
இலக்குகளை விசாலமாக வையுங்கள். உலகத்தையும் வாய்ப்புகளையும் அகலமாகப் பாருங்கள். குறியீடுகளை மனதில் பொருத்திக்கொண்டு இலக்குகளைத் துரத்தாதீர்கள். இந்தத் துரத்தலால் உங்களை அறியாமல் நீங்களே ஒரு கடிவாளத்தைக் கட்டிக்கொள்கிறீர்கள். உங்கள் இலக்குகளை அடைய வாசல் வரை கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைத் தவறவிடுகிறீர்கள்.
உங்கள் உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய பரிசும், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசியும், வரமும் உங்கள் முன்னால்தான் இருக்கிறது. ஆனால், அது நீங்கள் எதிர்பார்த்திருக்கும் வடிவில் இல்லை. அவ்வளவுதான். ஆனால், அது வேறு ஒரு வடிவில் இருப்பதால், கவனிக்கத் தவறவிடுவது எவ்வளவு பெரிய தவறு.
ஒரு பணக்கார வீட்டுப் பையனுக்கு ஸ்போர்ட்ஸ் கார் மீது ஆசை. எப்போதும் அது குறித்துதான் சிந்தனை. யார் அது மாதிரி கார் ஓட்டிப் போனாலும், மிக ரசிப்பான். எங்காவது அந்த கார் நின்றிருந்தால், ஒரு காதலியைப் பார்ப்பதுபோல் ரசித்துப் பார்ப்பான். நண்பர்களுடன் பேசும்போதுகூட, அந்த கார்பற்றிதான் பேசுவான்.
அப்பா ஒருநாள் சொன்னார், 'நீ கல்லூரிப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறு... உனது பட்டமளிப்பு நாளில் அந்த காரைப் பரிசாகத் தருகிறேன்' என்று. இளைஞனுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. அவன் கனவு கண்ட ஸ்போர்ட்ஸ் கார் அவனுக்குக் கிடைக்கப் போகிறது.
கார்பற்றிய கனவுகளோடு தீவிரமாகப் படிக்க ஆரம்பித்த அவன் முதல் வகுப்பில் தேறினான். பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. அவன் கனவு நிறைவேறப் போகிற நாள். பட்டத்தைக் கையில் வாங்கிக்கொண்டு அப்பாவைப் பார்க்க ஓடோடி வந்தான். அப்பாவிடம் பட்டத்தைக் கொடுத்துவிட்டு கண்கள் நிறைய எதிர்பார்ப்போடு நின்றான்.
மகிழ்ச்சியோடு அவனை அணைத்துக்கொண்ட தந்தை அருகில் இருந்த அறைக்கு அழைத்துப் போனார். இளைஞனுக்கு ஆர்வம் அளவில்லை. அங்கே அழகாக பேக் செய்யப்பட்டு இருந்த ஒரு பைபிளைப் பரிசாக வைத்திருந்தார் அப்பா. மகனுக்கு மாபெரும் ஏமாற்றம். அப்பா மீது ஆத்திரம்... அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற கோபம் வேறு.
அந்தப் பரிசை அவன் கையால்கூடத் தொடவில்லை. கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான். தந்தை சொல்ல முனைவது எதையும் அவன் கேட்கத் தயாராக இல்லை. கண் முன்னே அவன் ஸ்போர்ட்ஸ் கார் வந்து வந்து போனது. அன்று வீட்டைவிட்டு வெளியேறியவன், 10 வருடங்களில் நன்கு வளர்ந்து இருந்தான்.
அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று அவ்வப்போது தோன்றினாலும் ஏமாற்றியவரை ஏன் பார்க்க வேண்டும் என்று இருந்துவிடுவான்.
ஒருநாள் தந்தி ஒன்று வந்தது. தந்தை இறந்துவிட்டார் என்று. கனத்த இதயத்தோடு வீட்டுக்குப் போனான் இளைஞன். அப்பாவின் போட்டோ மட்டுமே தொங்கியது. பழைய நினைவுகளோடு வீட்டைச் சுற்றி வந்தவன், தற்செயலாக அந்த அறைக்குள் போனான். அப்பா பரிசாகக் கொடுத்த அந்த பைபிள் அப்போதும் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.
அதைக் கையில் எடுத்தபோது அதன் பின்பகுதியில் ஏதோ தட்டுப்பட்டது. திருப்பிப் பார்த்த மகனுக்கு அதிர்ச்சி. கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அந்த பைபிளின் பின்னால் அவன் ஆசைப்பட்ட ஸ்போர்ட்ஸ் காரின் சாவியும் அதை முழுத்தொகையையும் கொடுத்து பட்டமளிப்பு நாளில் வாங்கியதற்கான ரசீதும் இருந்தன.
அடியில் ஒரு வாசகம் 'அன்பு மகனுக்கு ஆசீர்வாதங்களுடன் அப்பா' என்றிருந்தது. அப்பாவையும் அவரின் அன்பையும் நினைத்து அழுவதைத் தவிர, வேறெதுவும் செய்ய முடியவில்லை. ஒருவேளை அந்த அறைக்குள் அப்பா அழைத்துச் சென்ற நாளில் ஸ்போர்ட்ஸ் கார் நின்று இருந்தால் மகனின் கனவு நிறைவேறி இருக்கும். ஸ்போர்ட்ஸ் கார் என்ற குறியீட்டை மனதுக்குள் வைத்திருந்த மகனுக்கு பைபிளுக்குப் பின்னால் அதன் சாவி இருக்கலாம் என்று தோன்றவில்லை. இப்படி நாமும் நமக்கு வழங்கப்பட்ட விவரங்களையும் ஆசீர்வாதங்களையும் எத்தனையோ முறை கவனிக்காமல் விட்டு இருக்கிறோம்.
இலக்கை அடைவதற்கு உரிய பாதை ஒன்று மட்டும்தான் இருக்கிறது. அது அடைபட்டுவிட்டது என்று நினைப்போம் என்றால், நம் எண்ணத்தில் ஏதோ கோளாறு இருப்பதாக அர்த்தம். உங்கள் வெற்றியின் வடிவம் நீங்கள் கற்பனை செய்ததுபோல் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது வேறு ஒரு வடிவில் உங்களுக்கு வந்து சேர நீங்களே தடையாக இருந்துவிடாதீர்கள்.
பரீட்சை முடிவுகள் வந்திருக்கின்றன. நீங்கள் நினைத்தது நடக்காமல் இருந்திருக்கலாம். உங்கள் இலக்கை அடைய இன்னும் எண்ணற்ற வழிகள் உங்கள் முன்னே இருக்கத்தான் செய்கின்றன.
கழற்றி எறியுங்கள் அந்தக் கடிவாளத்தை...
ஆள்வதற்கு இந்த உலகமே இருக்கிறது!
Monday, May 31, 2010
Sunday, May 16, 2010
நீயும்... நானும்! - கோபிநாத்
சமீபத்தில் ஒரு தகவல் படித்தேன் நூற்றில், தொண்ணூறு பேருக்கு மேடை ஏறிப் பேசுவதில் பயம் இருக்கிறதாம்.
இப்படி நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு விஷயம் குறித்துப் பயம் இருக்கும். சிலருக்கு, உயரம் பயம். சிலருக்கு, இருட்டு பயம். சிலருக்கு, தண்ணீர் பயம். சிலருக்கு, பேய், பூதம் பயம். சிலர் டூ விலரின் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு, 'பார்த்துப் போ... மெதுவாகப் போ' எனப் பயமுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
நாளை காலை உயிரோடு இருப்பேனா என்று பயந்தவாறே படுக்கைக்குச் செல்ப வர்கள் உண்டு. நிறையப் பணம் இருந் தும், தேவைகள் இருந்தும், விமானத்தில் பறக்கப் பயப்படுபவர்கள் உண்டு. பழைய கட்டடம், இருட்டு அறை, மலைப் பயணம் என எல்லோருக்கும் ஏதோ ஒரு பயம்!
வெளியில் இருந்து ஏதோ ஒன்று நம்மைப் பயமுறுத்துகிறது என்று நினைக் கிறோம். உண்மையில், பயம் நமக்குள்தான் இருக்கிறது. பாதுகாப்பின் பெயராலும், அச்சுறுத்தலின் பெயராலும், நாம் சிந்திக் கவும் எதிர்கொள்ளவும் மறுத்த, மறந்த காரணிகள் பயமாக மாறிப் பயமுறுத்து கின்றன.
ஒரு சின்ன விஷயமாக இருக்கும், அப்பாவிடம் பர்மிஷன் கேட்பது, கோபமாக இருக்கிற ஆசிரியரைச் சந்திப்பது, தன்னைப்பற்றி தவறாகப் பேசிய நண்பனை எதிர்கொள்வது என வாழ்க்கையின் மிகச் சாதாரண விஷயங்கள் அனைத்தையும் 'அப்புறம் பார்த்துக்கலாம்' என தள்ளிப்போடுவதுதான் மனதுக்குள் பயம் தங்க ஆரம் பிப்பதன் முதல் படி.
இந்த விஷயத்துக்கு 'அவர் என்ன சொல்வாரோ? அதனால், அப்புறம் பேசலாம்' எனத் தள்ளிப்போடுவது எளிதான உத்தி யாகத் தெரிந்தாலும், மனசுக்குள் ஆழமாக அந்த விஷயம் அரித்துக்கொண்டே போய் பயமாக மாறி நிற்கும்.
அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை மறந்து விட்டதுபோல உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டாலும் அந்த தள்ளிப்போடல் நடவடிக்கை மனசுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று ஆயிரம் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
அநேகமாக, அந்த விஷயத்தை நீங்கள் எதிர்கொண்டால், அது மிகச் சாதாரணமாக முடியவும் வாய்ப்பு உண்டு. 'இதுக்குப் போயா இப்படிப் பயந்துகிடந்தோம்' என்று சிரிப்பு வரலாம். 'எந்த விஷயத்தையும் நாம் பயத்தின் காரணமாக எதிர்கொள்ளத் தயங் குவது இல்லை. எதிர்கொள்ளத் தயங்கு வதால்தான் பயம் வருகிறது.'
ஏ.டி.எம். மிஷினில் பணம் எடுத்த பிறகு அதற்கான ரசீதை எடுக்க யோசிப்பவர்கள் உண்டு. ஒருவேளை சேமிப்பில் இருக்கும் பணம் மிகக் குறைவாக இருக்கிறது என்று அது காட்டினால்?
'வேணாம்ப்பா... அப்புறம் பார்த்துக்கலாம்' என்று தள்ளிப்போடுவது உண்டு. ஒருநாள் அவசரமாகப் பணம் எடுக்கப் போகும்போது உங்கள் கணக்கில் பணமே இல்லை என்று ரசீது வரும்.
ஓர் ஆங்கில அறிஞர், 'உங்கள் எதிரி புதர்களுக்குள் ஒளிந்திருக்கவில்லை. உங்க ளைத் தாக்குவதற்காக மலைப் பகுதிகளில் பதுங்கி இருக்கவில்லை. அது, பயம் என்ற பெயரில் உங்கள் மனதுக்குள் உட்கார்ந்து இருக்கிறது. எதிரியை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு உயர உயர எப்படிப் போவது?
உளவியலாளர்கள் ஒரு நல்ல பயிற்சியைச் சொல்கிறார்கள்... உங்களை எது பயமுறுத்துகிறதோ அதைப் பயப்படாமல் செய்யுங்கள். அதைச் செய்கிறபோது, 'இந்த விஷயத்தைச் செய்வதில் எனக்குப் பயம் உண்டு. ஆனாலும், அதைச் செய்கிறேன்' என்று சொல்லிக் கொண்டே செய்யுங்கள். மொத்தத்தில் உங்களைப் பயமுறுத்துவதாக நினைக்கும் எந்த விஷயத்தையும் மனசுக்குள் பதியவிடாதீர்கள்.
பயத்துக்கு எதிரான நம் வாழ்க்கைப் பயிற்சி எந்த விஷயத்தையும் எளிதாக்கிவிடும். கார் ஓட்ட ஆரம்பிக்கிறபோது, அல்லது புதிதாக பைக் ஓட்டும்போது, கிளட்ச்சைப் பாதியும் பிரேக்கைப் பாதியும் பிடித்துக்கொண்டே வண்டி ஓட்டுவோம். திடீரென யாராவது குறுக்கே வந்தால், கால்கள் பரபரக்கும். வேகமாக பிரேக்கை மிதிப்போம். சில நேரம் பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்துவோம். கண்களை அகலமாக விரித்து வைத்துக்கொண்டு பயந்தபடியே வண்டியில் பயணிப்போம்.
இந்தப் போராட்டங்களுக்குப் பயந்து, 'இதெல்லாம் நமக்குச் சரிப்படாதுப்பா' என்று கார் ஓட்டுவதைத் தவிர்த்தவர்கள்கூட உண்டு. ஆனால், ஆரம்பத்தில் பயந்து பயந்து பிரேக் அழுத்தி, கிளட்ச் பிடித்து, கியர் மாற்றி நாம் செய்த விஷயங்கள், பிறகு மிகச் சாதாரணமாகும். கொஞ்சம் பழகிய பிறகு, மனசுக்குள் தங்கியிருந்த பயம் வெளியேறிவிடும்.
எந்த ஒரு விஷயத்தையும் எதிர்கொள்ள ஆரம்பிக்கிறபோது, பயத்தை நாம் கையாளுகிறோம். அது நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எதிர் கொள்ளவும் அணுகவும் தயங்கித் தயங்கி நின்றால், பயம் நம்மைக் கையாள ஆரம்பிக்கிறது. உதைத்து விளையாடுகிறது.
நிர்வாகவியல் கருத்தரங்குகளில் பயம்பற்றியும் அதன் தன்மை குறித்தும் ஒரு விளக்கம் சொல்வார்கள். 'மீன் தொட்டியில் தாக்கும் குணம்கொண்ட கில்லர் வகையறா மீனையும், சாதுவான மீனையும் போடுவார்கள். இவை இரண்டுக்கும் நடுவே ஒரு கண்ணாடித் தகடைச் செருகிவைப்பார்களாம்.
ஒவ்வொரு முறை அந்தச் சாதுவான மீன் கடந்துபோகும்போதும் இந்த கில்லர் மீன் அதைப் பிடிக்க வேகமாக முன்னேறும். குறுக்கே கண்ணாடித் தடுப்பு இருப்பதால், அதன் முன்பகுதியில் அடிபட்டு கில்லர் பிஷ்ஷைத் திருப்பிவிடும். ஒரு நிலையில், அந்த கண்ணாடித் தகட்டை எடுத்த பிறகும் கில்லர் மீன், சாது மீனை நோக்கி நகராதாம். முன் னேறிப் போனால், மூக்கு அடிபடும் என்று அந்த மீனுக்குப் பயம்.
அடிபட்டாலும், பாதிப்புகள் வந்தாலும் ஒரு சிறிய இடைவெளி விட்டுத் தொடர்ந்து மோதுங்கள். பயத்தோடு பின்வாங்காதீர்கள் என்று சொல்கிறது நிர்வாகவியல்.
வாழ்க்கையும் அப்படித்தான். மோதுங்கள். பயத்துக்கு எதிராகப் பலமாக மோதுங்கள்.
உங்களைப் பயமுறுத்துகிற பயத்தைப் பயமுறுத்துங்கள். எதிர்கொள்வதற்கு நீங்கள் தயார் என்கிறபோது, பயம் பயப்படும்.
முன்னேறுவதற்கும் முயல்வதற்கும் பயம் ஒரு தடையாக இருக்க முடியாது... அந்தப் பயம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை.
இன்று தொடங்கலாம் பயத்தைப் பயமுறுத்தும் வேலையை. அது பல திசைகளை நமக்குச் சொல்லித்தரும்.
உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!
-ஒரு சிறிய இடைவேளை

Thursday, May 6, 2010
நீயும்... நானும்! - கோபிநாத்
பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலகின் பல நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் வேலை இழப்பது தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சில இடங்களில் அதிக அளவு சம்பளம் வாங்குகிறவர்கள், தங்கள் சம்பளத் தொகையைக் குறைத்துக்கொள்வதன் மூலம் சிலரின் வேலை காப்பாற்றப்படுகிறது.
இப்படி நிறுவன அளவிலேயே சக நண்பர்களுக்கு உதவும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் நிறைய இடங்களில் நடக்கின்றன. அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலீஸ் அருகில் Flower Fields என்று ஓர் இடம் உண்டு. வண்ணமயமான பூக்கள் ஏக்கர் கணக்கில் பாய் விரித்ததுபோலப் பூத்திருக்கும். இதைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடுவார்கள்.
அந்த இடத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் ஜாஸ் இசைக் குழு ஆரவாரமாகப் பாடிக்கொண்டு இருந்தது. அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற இசைக் குழுக்கள் உண்டு. வெளியில் ஓர் உண்டியல் இருந்தது. அதில் பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி என்று எழுதப்பட்டு இருந்தது.
எனக்குக் கொஞ்சம் ஆச்சர்யமாகவும் புதிதாகவும் இருந்தது. அந்த மாணவர்களிடம் பேசியபோது... 'எங்கள் பள்ளி நிர்வாகம் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி சில ஆசிரியர்களை வேலையில் இருந்து அனுப்ப முயற்சிக்கிறது. நிர்வாகத்துக்கு அந்த ஆசிரியர்களை வேலைக்கு வைத்துக்கொள்வதால் ஏற்படும் நிதித் தேவையைப் பூர்த்திசெய்ய நாங்கள் வார இறுதி நாட்களில் இப்படி நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் சேர்க்கிறோம்' என்றார்கள்.

கடந்த ஆறு மாதங்களாக இந்த மாணவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திக்வருகிறார்கள். நிறைய நிதியும் கிடைக்கிறது. 'We Love our Teachers' என்றார்கள் ஒரே வரியில்.
எவ்வளவு ஆத்மார்த்தம். ' கணக்கு வாத்தியாரைப் பிடிச்சா, கணக்கு தானா வரும்' என்று சொல்வார்கள். நேசியுங்கள், மனதார ஆசிரியரைப் பார்க்கிற உணர்வு அடர்த்தியான அன்புடன் கூடியது.
இந்த மாணவர்களிடம் பேசியபோது எனக்கு என் பள்ளி ஞாபகங்கள் வந்தன. யாராக இருந்தாலும் தோளில் கை போட்டுப் பேசிக்கொண்டே ஃபார்முலாக் கள் சொல்லித்தருகிற ஜேம்ஸ் சார்... எப்போது எது கேட்டாலும் அருகில் இருக்கிற மர நிழலில் நிறுத்தி விளக்கமாகச் சொல்லித் தருகிற அருள்ராஜ் சார்... காதைப் பிடித்துத் திருகியவாறே திருக்குறள் கேட்கும் முத்தியாலு ஐயா, பாட்டுப் பாடி பார்வையால் அபிநயம் காட்டிப் பாடம் நடத்தும் அரங்கசாமி ஐயா என்று எனக்கும் நிறைய நிறைய ஆசிரியர்களைப் பிடிக்கும்.
மாறி இருக்கிற கல்விச் சூழலில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நட்புறவு ஆத்மார்த்தமானதாக இருக்கிறதா?
கல்வி தொடர்பான தலைப்பில் நடந்த 'நீயா... நானா'வில் ஒரு மாணவர் யதார்த்தமாகச் சொன்னார் 'நாங்கள் பணம் கொடுக்கிறோம்... அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்' என்று. அப்படி வெறும் வர்த்தகத்தனத்தோடு பேசக் கூடாது என்று அங்கு கண்டிக்கப்பட்டாலும் அந்த மாணவரின் மனதில் இருந்த எண்ணம் அதுதான்.
ஒரு மளிகைக் கடைக்காரருக்கும், வாடிக்கையாளருக்குமான உறவைப்போல வியாபாரரீதியான உறவாக ஆசிரியர்-மாணவர் நட்பு மாறிக்கொண்டு வருகிறதோ என்று ஒரு சில நேரங்களில் தோன்றுகிறது. வெறுமனே பாடம் சொல்லித்தருகிற இன்னொரு கம்ப்யூட்டராக நம்முடைய ஆசிரியர்களை இந்தக் கல்விச் சூழல்மாற்றி வைத்திருக்கிறதோ என்ற சந்தேகம்கூட எழுகிறது.
ஆசிரியர் மரியாதைக்கு உரியவர் என்பதைத்தாண்டி அன்புக்கு உரிய மனிதராகத் தெரியவும், உணரவும் தேவைப்படுகிற வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. பள்ளியின் மீதும், கல்லூரியின் மீதும், ஆசிரியர்கள் மீதும் ஓர் உணர்வுபூர்வமான இணைப்பு மிகவும் அவசியம். அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கை கொடுக்கவும் உதவும்.
'நீங்கள் வேலை செய்கிற நிறுவனத்தோடு உணர்வு பூர்வமாகத் தொடர்புகொண்டு இருக்காதீர்கள்' என்று கார்ப்பரேட் உலகில் அறிவுறுத்தப்படுவது உண்டு. அதே மனோநிலை கல்விக்கூடங்கள் மீதும் மாணவர்களுக்கு வருவது நல்லது அல்ல.
அடுத்தவனைப்பற்றி எல்லாம் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லப்படுகிற அமெரிக்காவின் மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களின் நலனுக்காக நிதி திரட்டுகிறார்கள். இப்படித் தங்கள் பள்ளி, பகுதி மேம்பாடு, பொதுப் பிரச்னைகள் போன்ற பலவற்றுக்கும் மாணவக் குழுக்கள் உதவ முன்வருகின்றன.
ஒரு காலத்தில் இருந்ததைப்போல் பள்ளியையும் கல்லூரியையும் காதலிக்கத் தேவைப்படும் காரணங்கள் குறைந்துகொண்டே போனாலும், அவற்றின் மீது ஆசையோடு இருங்கள். இந்த ஆசைதான் நாளை அந்தப் பள்ளிக்குத் தேவைப்படுகிற பல விஷயங்களை உங்கள் மூலம் செய்துகொள்ளவைக்கும்.
மதிப்பெண்களே முக்கியம் என்ற நிலை வந்த பிறகு நீதிபோதனை வகுப்புகள் நிறைய இடங்களில் நிறுத்தப்பட்டன. அறிவியல் ஆசிரியருக்குக் கொடுக்கப்படுகிற முக்கியத்துவம், உடற்கல்வி ஆசிரியருக்கு இல்லாமல் போனது. பொதுச் சேவைகள், பொது நலப் பணிகளில் பங்கு எடுத்தல் குறித்த உணர்வை ஏற்படுத் தாமல்,அவைஒருபாடம்போல பயிற்றுவிக்கப்படுகின்றன.
அங்கு படிக்கிற ஒரு மாணவன் ஆசிரியரை வெறும் வாத்தியாராகப் பார்க்கிறான். சமூகத்திடம் இருந்து என்ன பெற முடியும் என்றே யோசிக்கிறான்.
அந்த அட்டவணைத்தனமான போக்குகள் மாற்றப்பட்டு ஆசிரியர்களை, ஆசான்களாகப் பார்க்கிற மனப்போக்கு அவசியம். இன்றைக்கும் தமிழகத்தின் பல பள்ளிகள் அதன் பழைய மாணவர்களால் சீரமைக்கப்பட்டு இருக்கின்றன. 'தங்களை வளர்த்த பள்ளி' என்ற உணர்வை அந்த மாணவர்களிடம் ஏற்படுத்தியது... ஆசிரியர்கள் மீதும் அந்த கல்விக்கூடம் மீதும் இருந்த அன்புதான்.
சக மனிதரோடு அன்பாகப் பழக வேண்டும் என்று தொடர்ந்து நம் கல்விக்கூடங்கள் சொல்லித்தருகின்றன. இந்த சொல்லித்தருதல் - உணரவைத்தல் என்ற இடத்துக்கு நகராமல் அன்பையும் நேசிப்பையும் வளர்க்க முடியாது. அதற்கு ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையே பாடத் திட்டத்தைத் தாண்டிய ஒரு பாசம் வேண்டும்.
சிக்னல்களில் நின்றுகொண்டு போக்குவரத்தைச் சரிசெய்கிற, கொடி நாளில் உண்டியல் குலுக்குகிற, பொதுத் தேவைக்காக வெயிலில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கிற பாசக்கார மாணவத்தனத்துக்கு முன்னால் மதிப்பெண்கள் சாதாரணமாகத்தான் தெரிகிறது.
அன்பையும் நேசிப்பையும் உணரவைப்பதற்கான உன்னதமான வாய்ப்பு ஆசிரியர் - மாணவர் உறவில் தொடங்குகிறது.
We Love our Teachers!
எவ்வளவு ஆத்மார்த்தமான வாசகம்!

Sunday, May 2, 2010
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா !
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

Subscribe to:
Posts (Atom)